கல்வி நுட்பவியல் |
நாம் 'கல்வி நுட்பவியல்' என்பதற்குப் பரந்த முறையிலோ குறுகிய முறையிலோ பொருள் கொள்ளலாம். இருப்பினும் பொருத்தமான அறிவியல், தொழில்நுட்ப முறையியல், உளவியல், சமூகவியல், மொழியியல், கருத்துத்தொடர்பியல் போன்றவற்றில் எழுந்துள்ள புதிய கருத்துக்களையும் கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் பயன் படுத்த முற்படும் ஒரு பிரிவாகவும் கல்வி நுட்பவியலுக்கு பொருள் கொள்ளலாம். கருவிகளாகப் பயன்படுத்தல் கல்விநுட்பவியலுக்கு இன்றியமையாததது என்பதாக மட்டும் இவ்விளக்கம் கருதுவதில்லை. |